Regional01

அரசு பள்ளியில் நூற்றாண்டு நினைவு வளைவு அடிக்கல் நாட்டு விழா

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கடையநல்லூர் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் அடிக்கல் நாட்டினார்.

அவர் பேசும்போது, “கடையநல்லூர் நகரின் மையப்பகுதியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 1921-ம் ஆண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. கடையநல்லூர் அரசுப் பள்ளி நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு வழங்குவேன்” என்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கமாலுதீன், தலைமை ஆசிரியர் சந்தர் சிங் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT