Regional02

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் நிர்வாக மேலாளர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2019 மற்றும் 2020-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அதிகப்படியான நேரம் வேலை வாங்காமல் 8 மணி நேரம் வேலை மற்றும் முறையான வார விடுமுறை அளிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் அரசு, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

SCROLL FOR NEXT