Regional02

பாஜக- விசிக மோதல் செஞ்சியில் 10 பேர் கைது

செய்திப்பிரிவு

வேல் யாத்திரிரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை கண்டித்து செஞ்சியில் பாஜகவினர் நேற்று ஊர்வலமாக சென்றனர். அப்போது, பாஜகவினரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் தடுத்து நிறுத்தினர்.

மனுநீதி விளக்க துண்டு பிரசுரங்களை வழங்க எங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் மட்டும் எப்படி ஊர்வலம் செல்லலாம் என விசிகவினர் கேள்வி எழுப்பினர். இரு கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது. பாஜகவின் கொடிகம்புகளை விசிகவினர் பிடுங்கி உடைத்தனர்.

அங்கு வந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானபடுத்தினர். இது தொடர்பாக பாஜகவினர் 8 பேர் மற்றும் விசிகவினர் 2 பேர் என 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT