Regional03

100 நாள் திட்டத்தில் முறைகேடு கண்டித்து மறியல்

செய்திப்பிரிவு

சிறுவங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட ரோடுமாமனந்தல் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தில் பணி செய்ததொழிலாளர்களுக்கு கூலி வழங்கியதல் முறைகேடு நடைபெற் றுள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ரோடுமாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100-க்கும்மேற்பட்டோர் நேற்று கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் மனு அளிக்க சென்றனர். அவர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காத தால்,அலுவலக நுழைவாயிலில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்ததால் அனைவரும் கலைந்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT