மதுரை அவனியாபுரத்தில் மாநகராட்சி மயானம் உள்ளது. மயான ஊழியர்கள் கூறியதாவது: மயானத்தை திறந்தவெளி மதுக்கூடமாகப் பலரும் பயன்படுத்துகின்றனர். தட்டிக்கேட்டால் எங்களை மிரட்டுகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு மயானத்துக்குள் வந்த சிலர், மின்வயரை துண்டித் துள்ளனர்.
மயானம் முழுவதும் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குவளைகள் கிடக்கின்றன. மின் மோட்டாரை சேதப்படுத்தியதால் இறுதிச் சடங்கு செய்ய வரும் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் இப்பகுதியில் சிறப்பு ரோந்துப் பணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.