குரங்கணி காவல் நிலையத்தில் மாணவர்களுக்காக செய்து தரப்பட்டுள்ள இலவச வைபை வசதியை தொடங்கி வைத்தார் காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வி. 
Regional01

குரங்கணி மாணவர்களுக்காக இலவச இணைய வசதி: காவல்துறையினர் ஏற்பாடு

செய்திப்பிரிவு

இதனைத் தொடர்ந்து குரங்கணி காவல்நிலையத்தில் உள்ள இணைய வசதி மூலம் மாணவர்களுக்கு இலவசமாக வைபை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை போடிநாயக்கனூர் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் செய்து தந்துள்ளார்.

காவல் நிலைய வளாகத்தில் மாணவர்கள் அமர்ந்து கற்பதற்கு பந்தல், குடிநீர் உள்ளிட்ட வசதி செய்து தரப்பட்டுள்ளது. இலவச இணைய வசதியை காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்தேஜஸ்வி நேற்று தொடங்கி வைத்தார். மலை கிராம மாணவர்களின் நலன் கருதி செய்யப்பட்டுள்ள இந்த வசதியை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT