மதுரை கிழக்கு ஒன்றியம் ஒத்தக்கடை கூட்டுறவு நகர கடன் சங்கத்தின் 2014-15 முதல் 2017-18 வரையிலான நிகர லாபத்தில் கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான பங்குத் தொகை ரூ.7,35,860. இந்தத் தொகைக்கான காசோலையை மதுரை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேஷிடம் கூட்டுறவுச் சங்கத் தலைவர் அ.பா.ரகுபதி வழங்கினார்.
இதில் மதுரைச் சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் சு.சதீஷ்குமார், ஒத்தக்கடை கூட்டுறவு நகரக் கடன் சங்கச் செயலர் ஆசிரியதேவன், மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் தீனதயாளன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
இந்த கூட்டுறவுச் சங்கம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒவ்வொரு நிதியாண்டும் தவறாமல் அதன் லாபத்திலிருந்து கூட்டுறவுத் துறைக்கு கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் கல்வி நிதியை வழங்கி வருவதாக சங்கச் செயலர் தெரிவித்தார்.