Regional01

நவ.10-ல் காணொலி வழியாக பி.எப். குறைதீர்க்கும் கூட்டம்

செய்திப்பிரிவு

மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் நவ.10-ல் காணொலி வழியாகக் குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நிறுவன உரிமையாளர்கள், வைப்பு நிதி உறுப்பினர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகள் விசாரிக்கப்பட்டு தீர்வு வழங்கப்படும். இதில் பங்கேற்க மொபைல்போனில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து `சிஸ்கோ வெபக்ஸ் மீட்டிங்' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பின்னர் குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்கும் விவரங்களை மொபைல் எண்ணுடன், ro.madurai@epfindia.gov.in என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மண்டல அலுவலகத்தில் இருந்து குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்பதற்கான தொடர்பு எண் தனியாக வழங்கப்படும். அந்த எண்ணைப் பயன்படுத்தி காணொலி குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்கலாம். இது தொடர்பான தொழில்நுட்பச் சந்தேகங்களுக்கு 8838381068 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT