தீபாவளி போனஸ் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் சந்தியூரில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு, கோஷம் எழுப்பினர்.
கடந்த 17 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் டாஸ்மாக் நிறுவன தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிடவும், எட்டு மணி நேர பணி நேரத்தை அமல்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகைக்காக 30 சதவீதம் போனஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து டாஸ்மாக் பணியாளர்கள் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
கிருஷ்ணகிரி
கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை உதவி மேலாளர் மாதேசிடம் நிர்வாகிகள் வழங்கினர்.