Regional01

பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சியில் கற்போம் எழுதுவோம் இயக்கத் திட்ட பயிற்சி முகாம்

செய்திப்பிரிவு

பள்ளிக் கல்வித் துறை சார்பில் கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020- 2021 என்ற புதிய எழுத்தறிவுத் திட்டம் மற்றும் பாடத் திட்ட அறிமுகம் மற்றும் மாவட்ட கருத்தாளர்களுக்கான மாநில அளவிலான 2 நாள் பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நிறைவடைந்தது.

தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற புதிய கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.

இதன் பாடத்திட்ட அறிமுகம் சார்ந்த மாநில அளவிலான பயிற்சி முகாம் திருச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தொடங்கி வைத்தார்.

இந்த கல்வித் திட்டத்தில் தன்னார்வ ஆசிரியர்களாக சேவையாற்ற விருப்பமுள்ள வர் களின் குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு. எனவே, தன்னார்வ ஆசிரியராக சேவையாற்ற விரும்புவோரும், இந்தத் திட்டத்தின் கீழ் பயில விரும்பும் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத மற்றும் படிக்கத் தெரியாதோரும் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரி யர்களை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT