தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய பல்வேறு அமைப்பினர். 
Regional03

பல்வேறு கட்சிகள், அமைப்பினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

சென்னையில் நவ.1-ம் தேதி தமிழ்நாடு நாளைக் கொண்டாடியதற்காகக் கைது செய்யப்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலனை விடுதலை செய்யக் கோரி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராசன் தலைமை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் அதிகாரம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தாளாண்மை உழவர் இயக்கம், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி, ஏஐடியுசி உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT