அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கு 7.5 சதவிகித இடஒதுக் கீடு அரசாணை பிறப்பித்துள்ள நிலை யில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவுரைப்படி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணபிரியா தலைமையில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
இம்முகாமில் சான்றிதழ் சரிபார்க்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளியில் பயின்றதற்கான முதன்மைக் கல்வி அலுவலர் சான்றொப்பமிட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.
இம்முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 24 மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமையாசிரிகள் மற்றும் பெற்றோருடன் பங்கேற்றனர்.