கடலூரில் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் காணொலி மூலம் ஏற்றுமதி மேம்பாடு கூட்டம் நடந்தது. 
Regional03

கடலூரில் ஏற்றுமதி மேம்பாடு குழுக்கூட்டம்

செய்திப்பிரிவு

கடலூரில் காணொலி மூலம் ஏற்றுமதி மேம்பாடு குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழில்துறை நிர்வாகிகள்,வணிக பேரமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் உணவு தானியங்கள், வெட்டிவேர் எண்ணெய், பலாப்பழம், கரும்பு,நெல் மற்றும் இதர பருப்பு வகைகள் ஏற்றுமதிக்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கடலூர் மாவட்டத்தை ஏற்றுமதி குவியம் ஆக்கும் வகையில் திட்டங்களையும் தயார் செய்து, அதற்கான நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT