கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.
தமிழக அரசு வரும் 10-ம்தேதி முதல் தியேட்டரை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ரசிகர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து அமர வேண்டும். தியேட்டர் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து பாதுகாப்புடன் செயல்படுத்த வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 60 தியேட்டர்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிப்பு, ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் அமர்வதற்கு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.