Regional01

நவ.9-ல் மு.க.ஸ்டாலின் பேசும் காணொலி பொதுக்கூட்டம் மதுரையில் 360 இடங்களில் ஒளிபரப்ப திமுக ஏற்பாடு

செய்திப்பிரிவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘தமிழகம் மீட்போம்-2021’ என்ற தலைப்பில் தேர்தல் பொதுக் கூட்டங்களில் காணொலி வாயிலாகப் பேசி வருகிறார். இக்கூட்டம் மதுரை மாவட் டத்தில் நவ.9-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகரில் பொறுப்புக் குழுத் தலைவர் கோ.தளபதி தலைமையில் ஆலோசனை நடந்தது. மாநகரில் 100 அரங்குகளில் திரை அமைத்து மு.க.ஸ்டாலின் பேச்சை ஒளிபரப்பவும், அந்தந்த வார்டுகளில் உள்ள கட்சியினர், பொதுமக்களைப் பங்கேற்க ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த ஆலோசனையில் மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி எம்எல்ஏ., எம்.மணிமாறன் மற்றும் ஒன்றிய, நகர் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இது குறித்து பி.மூர்த்தி கூறுகையில், புறநகரில் 2 மாவட்டங்களில் 260 இடங்களில் கூட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. அகன்ற திரை மூலம் ஸ்டாலின் பேச்சு ஒளிபரப்பப்படும் என்றார்.

SCROLL FOR NEXT