இந்நிலையில் அகழாய்வுப் பணிகள் செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இருந்தபோதிலும் தொடர்ந்து ஆவணப்படுத்தும் பணி நடந்து வந்தது. தற்போது அப்பணியும் நிறைவடைந்த நிலையில் நேற்று அகழாய்வுக் குழிகளைத் தொல்லியல் துறையினர் இயந்திரம் மூலம் மண் கொண்டு மூடினர். குழிகளை மீண்டும் எளிதாக தோண்ட வசதியாக குழியை முதலில் தார்ப்பாயால் மூடி, அதன்பிறகு மண் கொண்டு மூடுகின்றனர்.