மதுரை அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
Regional01

மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர், மதுரை அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நகர் புறநகர் மாவட்டத் தலைவர்கள் ரத்தினசாமி, சுமதி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர்கள் பாஸ்கரன், தமிழ்ச்செல்வி, மாநிலச் செயலாளர் முருகன், அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

பணிப்பளு அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர். அதனால், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஐந்து கட்டப் பதவி உயர்வு வழங்க வேண்டும். புறநகர் பகுதிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்த்து மருந்தாளுநர்கள் பணிபுரிகின்றனர். அதனால், ஆரம்ப சுகாதார நிலயங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT