மதுரை செல்லூர் மேம்பாலத்தின் கீழ் புதைக்கப்பட்டிருந்த ஆண் குழந்தையின் உடலை போலீ ஸார் மீட்டனர்.
மதுரை செல்லூரில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் இறந்த குழந்தையின் உடலை சிலர் பையில் கொண்டு வந்து நேற்று முன்தினம் புதைத்துச் சென்றதாக தகவல் வெளி யானது.
இது தொடர்பாக அப்பகுதி விஏஒ முத்துமுரளி செல்லூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் பாலத்துக்கு அடியில் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது, பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் புதைக் கப்பட்டு இருப்பது கண்டறியப் பட்டது.
வருவாய்த் துறையினர் முன் னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனு ப்பி வைக்கப்பட்டது.
செல்லூர் போலீஸார் வழ க்கு பதிவு செய்து அந்த குழந் தையை கொன்று புதைத் தார் களா, குழந்தையின் பெற் றோர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.