Regional02

உசிலம்பட்டியில் 110 மிமீ மழை

செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக உசிலம்பட்டியில் 110.20 மிமீ மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்று மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் சாரலுடன் கூடிய மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையில் 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம் (மி.மீ அளவில்): உசிலம்பட்டி-110.20, வாடிப்பட்டி-50, ஆண்டிபட்டி-38.2, பேரையூர்-35, கள்ளிக்குடி-25.80, குப்பணம்பட்டி-25, தனியாமங்கலம்-24, திருமங்கலம்-14.6, மேலூர், சோழவந்தான்-9, விரகனூர்-1.5.

SCROLL FOR NEXT