Regional02

ஏர்வாடியில் இளைஞர்மர்ம மரணம்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே இளைஞர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலாடி வட்டம் ஏர்வாடி அருகே பனையடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி மகன் கவிக்குமார்(21). இவரை கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை. பெற்றோரும், உறவினர்களும் தேடி வந்த நிலையில், அங்குள்ள விவசாய நிலத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் கவிக்குமாரின் உடல் கிடந்தது. ஏர்வாடி தர்ஹா போலீஸார், கவிக்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT