ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை அருகே கரும்பாலையில் பறிமுதல் செய்யப்பட்ட வெல்லம். 
Regional01

ஓமலூர் அருகே 70 மூட்டை வெல்லம் பறிமுதல்

செய்திப்பிரிவு

ஒமலூர் அருகே கலப்படம் என சந்தேகிக்கப்படும் 70 மூட்டை வெல்லத்தை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள 4 வெல்லம் ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, வடகம்பட்டி யில் ஏழுமலை என்பவரது கரும்பாலையில் கலப்பட வெல்லம் என சந்தேகிக்கப்படும் 70 மூட்டை வெல்லம், 12 மூட்டை சர்க்கரை மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரம் 20 கிலோ, சோடா ஆஷ் மற்றும் சோடியம் பை கார்பனேட் தலா 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

“வெல்லத்தின் தன்மை குறித்த ஆய்வறிக்கைக்குப் பின்னர் கரும்பாலை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ” என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT