Regional02

குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி தினேஷ் மெண்டிஸ் என்ற தினேஷ் (45). இவர்கடந்த 12.10.2020-ல் மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தத்தில் அருகில் உள்ள வீட்டில் இருந்த அண்ணாமலை என்ற சதீஷ் (42) என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தினேஷை கைது செய்தனர்.

தூத்துக்குடி கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த அண்ணாத்துரை மகன் ராஜாராமன் (27). இவர்கடந்த 01.09.2020 அன்று அப்பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வனகொடுமை செய்ததாக தூத்துக்குடி அனைத்து மகளிர்போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில்ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தர விட்டார். இருவரும் சிறையில் அடைக் கப்பட்டனர்.

SCROLL FOR NEXT