செய்யாறு அடுத்த தளரபாடி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் ஒருவருக்கு இலவச சேலையை வழங்கிய எம்எல்ஏ தூசி கே. மோகன். 
Regional02

இலவச வேட்டி-சேலை வழங்கல்

செய்திப்பிரிவு

உதவித் தொகை பெறும் பயனாளி களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தளர பாடி கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை உட்பட பல்வேறு உதவித் தொகைகளை பெறும் பயனாளி களுக்கு இலவச வேட்டி-சேலையை செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் வழங்கினார். இதில், வட்டாட்சியர்கள் திருமலை, சுபாஷ், செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மகேந்திரன், மாவட்ட இணை செயலாளர் விமலாமகேந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் குணசீலன், துரை, நகரச் செயலாளர் ஜனார்த்தன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கன்னியப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேஷ்நாராயணன், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் செபாஸ்டின்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT