பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் திருப்பத்தூர் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பத் தூர் அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநர் லட்சுமிபதி தலைமை வகித்தார். ஆம்பூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருந்தாளுநர் நடராஜன் முன்னிலை வகித்தார். முன்னதாக, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் கோவிந்தராஜ் வரவேற்றார்.
இதில், "அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்கிட வேண்டும்.
தலைமை மருந்தாளுநர், மருந்துக் கிடங்கு அலுவலர் ஊதிய முரண்பாடுகளை களைத்திட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ குறியீட்டின்படி கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
மருந்தாளுநர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மருந்தக கண்காணிப்பாளர், மருந்தியல் அலுவலர், துணை இயக்குநர், மருந்தியல் பணி யிடங்களை உருவாக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் 50-க்கும் மேற் பட்ட மருந்தாளுநர்கள் கலந்து கொண்டனர்.