வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி வரை திருமண மண்டபங்களில் சுப நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், மதம் சார்ந்த கூட்டங்கள், இதர பொது நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என வேலூர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித் துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. கரோனா நோய் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.
இருந்தாலும், பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு உத் தரவு நவம்பர் 30-ம் தேதி வரை கடைபிடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அரசின் உத்தரவை பின்பற்றாத பொதுமக்கள் பல் வேறு இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் கூட்டம், கூட்ட மாக பொது இடங்களில் கூடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பேருந்துநிலையம், ரயில் நிலையம், கோயில்கள், பஜார் பகுதிகள், காய் கறி மற்றும் உழவர் சந்தை, இறைச்சி மற்றும் மீன்கடைகளில் கரோனா தொற்று பயம் இல்லா மல் சகஜமாக கூட்டம் கூடி வரு கின்றனர். அதில், பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாம லும், சமூக இடைவெளியை பின்பற் றாமலும் வலம் வருகின்றனர்.
சுகாதார துறையினர் எச்சரிக்கை
இதுதவிர, சமீபகாலமாக ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் திருமண மண்டபங்கள், மினி ஹால் களில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதில், குறைந்த அளவிலான பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணிய வேண் டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற அரசின் வழிமுறைகளை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை. இதனால், கரோனா பரவல் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
எனவே, நவம்பர் 15-ம் தேதி வரை திருமண மண்டபம் மற்றும் இதர பொது இடங்களில் அரசியல் கூட்டங்கள், மதம் சார்ந்த கூட்டங்கள், இதர பொது நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப் படுவதாக ஆட்சியர்கள் சண்முக சுந்தரம் (வேலூர்), சிவன் அருள் (திருப்பத்தூர்) ஆகியோர் நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித் துள்ளனர்.