Regional02

பண்ருட்டியில் முன்னாள் அமைச்சர் வீட்டில் கொள்ளை

செய்திப்பிரிவு

பண்ருட்டியில் முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரனின் வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

பண்ருட்டி எல்என்புரம் ஸ்டேட்பேங்க் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.சி. தாமோதரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது மகன் திருமணத்திற்காக, தாமோதரன் தன் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி, திருமண வேலைகளை பார்த்து வந்தார்.

இந்நிலையில் பண்ருட்டியில் உள்ள தாமேதரன் வீட்டின் முன்பக்க கதவு நேற்று உடைக்கப்பட்டு இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் அதைப் பார்த்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீஸார் நேரில் சென்று வீட்டை பார்வையிட்டனர்.

வீட்டில் உள்ளே இருந்த 2 பீரோக்கள் திறந்த கிடந் தன. அதில் இருந்த பொருட்கள் வெளியே வீசிப்பட்டு சிதறி கிடந்தன. கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று திரும்பியது.

இதற்கிடையே, கொள்ளை நடந்த தனது வீட்டைப் பார்வையிட முன்னாள் அமைச்சர் தாமோதரன் சென்னை யில் இருந்து நேற்றிரவு பண்ருட்டிக்கு வந்தார். அவர் வீட்டைப் பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.

முன்னாள் அமைச்சர் தாமேதரன், தற்போதைய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT