Regional01

காமராசர் பல்கலை. அரியர்ஸ், ஆன்லைன் தேர்வில் தோல்வியடைந்தோருக்கு மறுதேர்வு

செய்திப்பிரிவு

மதுரை காமராசர் பல்கலை.க்கு உட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கான ஆறாம் பருவத்தேர்வு செப். 18-ல் தொடங்கி 30-ம் தேதி வரை இணையவழியில் நடந்து அக். 28-ல் தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில், காமராசர் பல்கலை.யில் தேர்வுக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்ச மதிப்பெண்களை ஏற்க விரும்பாவிட்டால் தேர்வு எழுதிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இக்கல்வி ஆண்டில் நடந்து முடிந்த ஆன்லைன் பருவத் தேர்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே முடிவு வழங்கியதில் சராசரியாக 3.5% மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை, எனவே பருவத் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களும், குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்து மீண்டும் தேர்வு எழுத விரும்பும் அரியர்ஸ் மாணவர்களும் நடைபெற உள்ள ஆன்லைன் துணைத் தேர்வில் பங்கேற்கலாம். ஆன்லைன் தேர்வு நவ.,9-ல் தொடங்குகிறது என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT