மற்றவை

தமிழகம் நிலவரம்: அதிமுக அதிக இடங்களில் முன்னிலை

செய்திப்பிரிவு

காலை 9.45 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிமுக 36 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக, பாமக தலா ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலை வகிக்கிறார்.

கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். தருமபுரியில், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். சேலத்தில் தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஸ் பின்னடைவை சந்தித்துள்ளார். வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது. நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா பலத்த பின்னடைவை சந்தித்துள்ளார்.

புதுச்சேரியை பொருத்தவரையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி முன்னிலை வகிக்கிறார்.

SCROLL FOR NEXT