மத்திய அரசு சுற்றுலாத் துறை, நாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளை ஒருங்கிணை க்கும் விதமாக புதிய இணைய முகப்பை தொடங்கியுள்ளது.
இந்த இணைய முகப்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை சுற்றுலாத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுற்றுலாத் துறை சார்பில் தொடங்கப் பட்டுள்ள www.nidhi.nic.in என்ற இணையதளத்தில் தங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மேலவெளி வீதியில் உள்ள சுற்றுலாத் துறை அலுவலகத்தை 0452-2334757 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.