சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்த கணேசனின் மனைவி தீபா(36). கணவர் இறந்ததால் 4 ஆண்டுகளுக்கு முன் 2 மகன்களுடன் தீபா தனது தாய் ஊரான திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள சோபனாபுரத்துக்கு குடி வந்தார். அங்குள்ள அரசுப் பள்ளியில் இவரது மகன் சந்தோஷ்(11) 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ் தனது தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் சந்தோஷின் கழுத்தில் சேலை சுற்றி இறுக்கியது. இதில் மயங்கி விழுந்த அவரை உப்பிலியபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், சந்தோஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.