பிஎஸ்என்எல் மதுரை தொலைத் தொடர்பு பகுதியில் அக்.27 முதல் நவ.2 வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக் கப்பட்டது.
இந்த ஆண்டு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் முக்கியக் குறிக்கோளாக “விழிப்புணர்வு இந்தியா, வளமான இந்தியா” என்பதை வலி யுறுத்தி பிஎஸ்என்எல் அலுவலகங்களிலும், தொலைபேசி நிலையங்களிலும் பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன. முதன்மைப் பொது மேலாளர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வலைதளம் மூலமாக தல்லாகுளம், திண்டுக்கல், ராமநாதபுரம் வாடிக்கையாளர் மையங்களுக்கு வரும் மக்களும் “ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி” ஏற்க வசதி செய்யப்பட்டது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் இணையதளத்திலும் தங்கள் உறுதிமொழியை பதிவு செய்தனர். கண்காணிப்பு விழிப்புணர்வு சிறப்புக் கருத்தரங்கம் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஓய்வுபெற்ற ஜிஎஸ்டி மற்றும் கலால் துறை உதவி ஆணையர் சோம. நாகலிங்கம் சிறப்புரை ஆற்றினார்.