Regional01

மதுரை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நள்ளிரவு வரை சோதனை ஆய்வாளரிடம் ரூ.1.23 லட்சம் பறிமுதல்

செய்திப்பிரிவு

மதுரையிலுள்ள உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு (சிஐடி) காவல்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் ஆய்வாளரிடம் இருந்து ரூ. 1.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதூர் கற்பக நகரில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவு செயல்படுகிறது. இங்கு ஆய்வாளராக ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர்.

இவர்கள் தீபாவளி பண்டிகை யையொட்டி மதுரையிலுள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள், சிறு வியாபாரிகளிடம் கெடுபிடியாக லஞ்சப் பணம் வசூலிப்பதாக பல் வேறு புகார்கள், மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு வந்தன.

இது தொடர்பாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு காவல்துறை அலுவலகத்தை சோதனையிட லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டனர்.

இதன்படி, நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் குமரகுரு, கண்ணன், ரமேஷ் பாபு உட்பட 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடியாக அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

அப்போது, பணியில் இருந்த ஆய்வாளர் ஜான்பிரிட்டோவை ஆய்வு செய்து, அவரது மேஜை டிராயரில் இருந்த ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 500-ஐ கைப்பற்றினர். இதற்கு அவர் சரியான கணக்குச் சொல்ல முடியாத சூழலில் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், எழுத்தர் அறையை ஆய்வு செய்தபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 ஆயிரத்தைக் கைப்பற்றினர். இரவு 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடந்த இந்த அதிரடி சோதனையில் கணக்கில் காட்டாத மொத்தம் ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 500 யை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காவல் ஆய் வாளர் ஜான்பிரிட்டோ, எழுத்தர் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மதுரை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு போலீஸ் அலுவல கத்திலேயே லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் சோதனை நடத்தியது மதுரை மாநகர் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT