Regional02

அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம்

செய்திப்பிரிவு

விருதுநகரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

ஓய்வூதியர் சங்க உறுப்பினர் குருபரன் என்பவர் கூட்டுறவு சார்-பதிவாளர் பணியில் இருந்து ஓய்வுபெற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளாகிவிட்டது. பலமுறை சங்கத்தின் மூலம் முறையிட்டும் இதுவரை ஓய்வூதியம், பணப்பலன்கள் வழங்காத மாவட்ட இணைப் பதிவாளர் திலீப்குமாரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கல்யாணி, திருவண்ணாமலை, குமாரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கழுதையின் புகைப்படம் அச்சிடப்பட்ட பேனரைக் கொண்டு வந்து அதனிடம் மனு அளிக்கும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT