Regional02

தமிழகம் முழுவதும் தேசிய தெய்வீக ரத யாத்திரை: கருணாஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் எம்எல்ஏ புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எங்களுக்கு உள் இட ஒதுக்கீடு, மருது சகோதரர்களுக்கு சிலை வைத்தல் போன்ற சமுதாயம் சார்ந்த கோரிக்கைகளை ஏற்கும் கட்சியோடுதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். தமிழக பாஜக தலைவர் முருகன், வேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அதேபோல, முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பில் தேசிய தெய்வீக ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம். ரஜினிக்கு அரசியல் தெரியாத ஒன்று. எனவே அவர் அரசியலுக்கு வராமல் ஓய்வெடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார்.

SCROLL FOR NEXT