Regional01

அரசு கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

செய்திப்பிரிவு

ஊழல் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் கல்லூரி முதல்வர் கே.மாரியம்மாள் தலைமையில் அனைவரும் ஊழலுக்கு எதிராக உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

கலைப் பண்பாட்டு ஒருங்கிணைப்பாளர் ம.ராஜா தலைமையில், ஊழல் ஒழிப்பு தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கணினி துறைத் தலைவர் ஏ.நிஷா ஜெபசீலி வரவேற்றார். தமிழ்த் துறைத் தலைவர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT