Regional02

ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த, அப்பகுதி மக்கள் 2010-ம் ஆண்டில் 1.81 ஏக்கர் நிலம் வழங்கியதுடன், கட்டிட நிதியாக 2014-ம் ஆண்டில் ரூ.1 லட்சம் வைப்புத் தொகை செலுத்தியுள்ளனர்.

ஆனால், இதுவரை கூடுதல் கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. இந்நிலையில் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டக் கோரியும், அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் மனு அளிக்க வந்த கிராம மக்கள் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT