Regional03

எல்ஐசி ஓய்வூதியர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட அலுவலகம் அருகே எல்ஐசி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

எல்ஐசி நிர்வாகம் ஊதிய உயர்வுக்கேற்ற வகையில் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, ஆர்.புண் ணியமூர்த்தி தலைமை வகித் தார். பி.விஜயகுமார் வரவேற் றார். போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் பாலசுப்பிர மணியன், எல்ஐசி ஊழியர் சங்கம் எஸ்.செல்வராஜ், சேது ராமன், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சங்கம் அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.

SCROLL FOR NEXT