ஆரணியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 260 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டையை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
தி.மலை மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத் தில் நேற்று நடைபெற்றது. ஆட்சி யர் கந்தசாமி தலைமை வகித்தார்.
முகாமில் 260 பேருக்கு புதிய அடையாள அட்டைகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந் திரன் வழங் கினார். மேலும், 2 பேருக்கு மூன்று சக்கரவண்டி, 4 பேருக்கு சக்கர நாற்காலி, 5 பேருக்கு காதொலி கேட்கும் கருவி ஆகியவையும் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.