BackPg

அருணாச்சல் அருகே ரயில் பாதை அமைக்கிறது சீனா

செய்திப்பிரிவு

லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறலை அடுத்து, அந்நாட்டை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்தியா அதிகரித்து வருகிறது. மேலும், லடாக் தொடங்கி அருணாச்சலப் பிரதேசம் வரை வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிடும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. புதிய சாலைகள், பாலங்களை அமைப்பது போன்ற பணிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. ஒருவேளை, எதிர்காலத்தில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் அங்கு உடனே படைகளை அனுப்புவதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத் வரை ரயில் பாதை அமைக்கும் பணியை சீனா முழுவீச்சில் தொடங்கியிருக்கிறது. சிச்சுவானின் யான் நகரம் முதல் திபெத்தின் லின்ஜி கிராமம் வரையிலான 1,011 கி.மீ. வரை இந்த பிரம்மாண்ட ரயில் பாதை அமையவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் மிக விரைவில் தொடங்கவுள்ளதாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இந்த ரயில் பாதை திட்டமானது அம்மாநிலத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT