பிரியங்கா ராதாகிருஷ்ணன் 
BackPg

நியூஸிலாந்து அமைச்சராக சென்னை பெண் நியமனம்

செய்திப்பிரிவு

கடந்த அக்டோபர் 17-ம் தேதி நியூஸிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான ஆளும் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

பிரதமர் ஜெசிந்தா தனது புதிய அமைச்சரவையை நேற்று அறிவித்தார். இதில் 20 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கேபினட் அமைச்சர்கள் ஆவர். கேபினட் அந்தஸ்து இல்லாமல் 4 பேர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சென்னையை சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளார். கேரளாவின் எர்ணாகுளம் அருகே பரவூரை பூர்வீகமாகக் கொண்ட பிரியங்காவின் குடும்பத்தினர் சென்னையில் வசித்தனர். கடந்த 1979-ம் ஆண்டில் சென்னையில் பிரியங்கா பிறந்தார்.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் வசிக்கும் பிரியங்கா, கடந்த 2006-ம் ஆண்டில் தொழிலாளர் கட்சியில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார். எனினும் திறமையின் அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சமூகம், இனம், சிறுபான்மை, இளைஞர், சமூக மேம்பாடு, வளர்ச்சித் துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT