ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் அமைந்துள்ளது காபுல் பல்கலைக்கழகம். சுமார் 17,000 மாணவர்கள் பயிலும் இங்கு புத்தகக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆப்கனுக்கான ஈரான் தூதர் பகதூர் அமினியான் பங்கேற்றார்.
மாலை 4 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்துக்குள் திடீரென 3 தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து ராணுவத்தினர் விசாரிக்கின்றனர்.