Regional01

சமூக வலைதளங்களில் தவறான தகவல்

செய்திப்பிரிவு

காந்திய மக்கள் இயக்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் எஸ்.பி. அபிநவ்விடம் நேற்று புகார் மனு கொடுத்தனர். அவர்கள் மனுவில் கூறியிருப்பது:

காந்திய மக்கள் இயக் கத்தின் நிறுவன தலைவர் தமிழருவிமணியன் வெளியிட் டதாக தவறான தகவல்களை சிலர் திட்டமிட்டு சமூக வலைத்தலங்களில் பரப்பி வருகின்றனர்.

இது தமிழருவி மணியனின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதுடன் பொது அமைதிக் கும், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT