Regional02

ஓட்டுநர் கொலையில் 7 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவெண்ணைநல்லூர் அருகே எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலீல்(42). ஓட்டுநரான இவர், கடந்த 31-ம் தேதி பைக்கில்வந்த கும்பலால் கொல்லப்பட்டார். இதுகுறித்து திருவெண் ணைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

விசாரணையில், திருவண் ணாமலை ஜென்னத் நகரைச் சேர்ந்த தஸ்தகீர் (25) என்பவர்சொத்து தொடர்பாக தனது நண்பர்களுடன் சேர்ந்து கலீலை கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக தஸ்தகீர், திருவண்ணாமலை ஜென்னத் நகரைச் சேர்ந்த தர்வீஸ் (25), பல்லவன் நகரைச் சேர்ந்த தனசேகர் சூர்யா (25), சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் இக்பால் ( 28),திருக்கோவிலூர் அருகே வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்த புண்டாரி (எ)நன்னேபா (80) , எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகமதுபைரோஸ் (35), நவிபாஷா (53) ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT