Regional01

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடத்தக்கோரி வழக்கு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கிராம சபைக் கூட் டத்தை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த அருண் அய்யனார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அக். 2-ல் நடை பெற வேண்டிய கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 4 முறை கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது கட்டாயம். இதில் கிராம ஊராட்சிக்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படும்.

இந்தாண்டு கரோனா பரவலால் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது சட்டவிரோதம்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

SCROLL FOR NEXT