செப்டம்பர் மாத ஊதியம் வழங்கக் கோரி மதுரை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த இளைஞர்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
Regional01

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை மதுரை மாநகராட்சி மீது தற்காலிகப் பணியாளர்கள் புகார்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டதற்கு ஊதியம் வழங் கவில்லை என்று ஒப்பந்தப் பணியாளர்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

மதுரையில் கரோனா பரவல் அதிகமாக இருந்தபோது நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க மாநகராட்சி நிர்வாகம் வார்டுதோறும் 45 பேர் வீதம் படித்த இளைஞர்களை தற்காலிகப் பணிக்கு நியமித்தது. இவர்கள் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக் கப்பட்டனர். அவர்கள் 100 வார்டு களிலும் வீடுகள்தோறும் காய்ச்சல் பரிசோதனை செய்தனர்.

இவர்களை செப்டம்பர் மாதமே முன்அறிவிப்பு இன்றி பணியில் இருந்து நீக்கி யதாகவும், ஒப்பந்தப்படி செப்டம்பர் மாதத் துக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறி மதுரை மாவட்ட ஆட்சி யரிடம் அவர்கள் நேற்று புகார் தெரிவித்தனர்.

அவர்கள் கூறியதாவது: நாங்கள் கரோனா தொற்று பரவிய காலகட்டத்தில் சேவை அடிப்படையில் வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்தோம். ஆனால், எங்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் வழங்கவில்லை. பணிபுரிந்தவர்களில் 90 சத வீதம் பேர் இளைஞர்கள். அவர்களில் பலர் பட்டதாரிகள். வேறு வேலையும் தற்போது கிடைக்க வில்லை. எங்களுக்கு அந்த ஊதியத்தை வழங்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT