Regional02

கண்மாயில் மூழ்கி இளைஞர் மரணம்

செய்திப்பிரிவு

கடலாடி அருகே மேலக்கிடாரத்தில் நடந்த கோயில் விழாவுக்காக மணிகண்டன் என்பவரது வீட்டுக்கு, அவரது உறவினர் ரவிச்சந்திரன் மகன் பாலாஜி (18) என்பவர் சென்னையில் இருந்து வந்திருந்தார். பாலாஜியுடன், சென்னையைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தினேஷ்(18), வேலு மகன் யுவனேஷ்(18) ஆகியோரும் வந்திருந்தனர்.

பாலாஜி, தினேஷ், யுவனேஷ் ஆகியோர் அங்குள்ள கண்மாயில் நேற்று மாலை குளித்தபோது தினேஷ் நீரில் மூழ் கினார். கிராம மக்கள் அவரை மீட்டு சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற் கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். கீழச் செல்வனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT