Regional02

அரசுப் பள்ளியில் மடிக்கணினி திருட்டு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பூட்டப்பட்டிருந்த பள்ளியின் கதவை உடைத்த நபர்கள், தலைமையாசிரியர் அறை யின் கதவையும் உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த மடிக்கணினி, 6 யுபிஎஸ் பேட்டரிகள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக பள்ளியின் தலைமையாசிரியர் செந்தில்குமார், உத்தனப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT