Regional01

வீடு புகுந்து திருட முயன்றவர் சிக்கினார்

செய்திப்பிரிவு

ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் வசிப்பவர் முருகேசன். இவரது மனைவி கவுரி. இவர்கள் இருவரும், நேற்று 100 நாள் வேலை திட்ட பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனே, அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே இருந்த மர்ம நபரை பிடித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், செங்கல் பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT