Regional02

மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு

செய்திப்பிரிவு

தி.மலையில் மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தி.மலை நகரம் கல்புதிரை பகுதியில் வசிப்பவர் ரகிம் முநிஷா. இவர், ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதி யில் நடைபெற்ற உறவினர் திருமணத்துக்காக தனது குடும் பத்துடன் கடந்த மாதம் 31-ம் தேதி சென்றுள்ளார். பின்னர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோலிருந்த 20 பவுன் நகை, 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரகிம் முநிஷா தி.மலை நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT