Regional02

கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு சரிவர செயல்படவில்லை ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசே மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான கே.தங்கவேல் படத் திறப்பு விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கை களில் தமிழக அரசு சரிவர செயல்படவில்லை. வரும் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தவிர்க்க முடியாததாக இருந்தாலும், பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசே மேற்கொள்ள வேண்டும்.

விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி நவம்பர் 26-ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து விவசாயிகளை பாதுகாக்க வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். மக்களவை உறுப்பினர்கள் கே.சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT